அலோர் ஸ்டார், மே.14-
இம்மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தலில் தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு நடப்புத் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லியை எதிர்த்துப் போட்டியிடும் நூருல் இஸா வெற்றி பெறுவார் என்று கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர் ஆருடம் கூறியுள்ளார்.
துணைத் தலைவர் தேர்தலில் நூருல் இஸா வெற்றி பெறுவார் என்று தாம் இப்போதே எழுதிக் கொடுப்பதாக அந்த பாஸ் தலைவர் கூறுகிறார்.
அதே வேளையில் நூருல் இஸாவிற்கு தமது ஆதரவு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பெர்மாதாங் பாவோ எம்.பி.யான நூருல் இஸா யாரையும் சாடக்கூடிய நபர் அல்ல என்றும் சனூசி வர்ணித்தார்.