கோலாலம்பூர், மே.15-
நேற்று கோலாலம்பூர், ஜாலான் சுல்தான் இஸ்மாயிலில் உள்ள ஹார்ட் ரோக் கேஃபே கட்டடத்திற்கு அருகிலுள்ள வனப் பகுதியில் புழுக்கள் மொய்த்த நிலையில் ஆடவர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. டாங் வாஙி மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் கட்டுப்பாட்டு மையம் இந்தச் சம்பவம் குறித்து தகவல் பெற்றதாக அதன் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் கூறினார்.
சிறிய மலைப்பாங்கான வனப் பகுதியில் கிடைத்த ஆடவரின் உடல், புழுக்கள் மொய்த்த நிலையில் இருந்ததால் இனம், வயது போன்ற தகவல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றார். அவ்வுடல் பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.