அலோர் ஸ்டார், மே.15-
கெடா மாநிலத்தில், மின் சிகரெட் அல்லது வேப் விற்பனைக்கான உரிமங்கள் புதுப்பிக்கப்பட மாட்டாது. ஏனெனில் இது போதைப் பொருளைப் பயன்படுத்தும் கருவியாக மாறக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கெடா மாநில முதல்வர் சனூசி முகமட் நோர் தெரிவித்துள்ளார்.
கெடா மாநிலத்தில் வேப் விற்பனையை முழுமையாகத் தடை செய்யும் நடவடிக்கை அவசரமாக எடுக்கப்படாது என்றும், ஏற்கனவே உள்ள உரிமங்கள் காலாவதியான பிறகு, அடுத்த ஆண்டு முதல் தடை முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். போதைப் பொருளை எதிர்த்துப் போராடுவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மாவட்ட அளவில் தீவிரப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.