ரஃபிஸி பகிரங்க விவாதத்தை விரும்புகிறார், தேவையில்லை என்கிறார் இஸா

பெட்டாலிங் ஜெயா, மே.15-

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் ரஃபிஸி ரம்லியுடன் பகிரங்க விவாதத்தை விட கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவதில் நூருல் இஸா அன்வார் அதிக ஆர்வம் காட்டுகிறார். கட்சியில் பதற்றத்தைக் குறைப்பதிலும், பிரதிநிதிகளுடன் உரையாடுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

கட்சியின் உல்பூசல்களை அதிகரிக்கும் செயல்களில் ஈடுபட அவர் விரும்பவில்லை. பகாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிகேஆர் பிரதிநிதிகளும் பொதுமக்களும் சரியான முடிவுகளை எடுக்க விவாதம் நடத்த ரஃபிஸி விருப்பம் தெரிவித்தார். மே 23ஆம் தேதி நடைபெற உள்ள பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் ரஃபிஸி ரம்லியுடன் நூருல் இஸா போட்டியிட உள்ளார். வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பிகேஆர் கவனம் செலுத்த வேண்டும் என்று நூருல் இஸா வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS