103 சிலிண்டர்கள் பறிமுதல்

கோல லங்காட், மே.15-

சிலாங்கூர் உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சின் கீத்தா கெம்பூர்- ஓப்ஸ் காசாக் 2025 தொடர் சோதனை நடவடிக்கையில், சட்டவிரோதமாகச் சமையல் எரிவாயு கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டு 14 கிலோ, 50 கிலோ எடை கொண்ட 103 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்கப் பிரிவின் தலைவர் முகமட் ஹனிஸாம் பின் கெசிக் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.

நேற்று கோல லங்காட்டில் நடத்தப்பட்ட இச்சோதனையில், அந்த எரிவாயு சிலிண்டர்கள் இருந்த ஒரு டன், மூன்று டன் கொள்ளளவு கொண்ட இரண்டு லாரிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுமார் ஒரு இலட்சம் வெள்ளி ஆகும். இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு மலேசியரும், நான்கு வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS