ஈப்போ, மே.15-
தெலுக் இந்தானில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய மத்தியக் கலகத் தடுப்புப் படை வீரர்களில் மூவர் இன்னமும் கவலைக்கிடமான நிலையில் சுயநினைவின்றி உள்ளனர். ஹிலிர் பேரா காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் டாக்டர் பக்ரி ஸைனால் அபிடின் கூறுகையில், 44 வயது காப்ரல் ஹஸ்லிஸால் முகமட் அலி, 50 வயது சார்ஜன் மஸ்லான் மாட், 39 வயது காப்ரல் முகமட் இஸ்வான் இஷாக் ஆகியோர் தெலுக் இந்தான் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாகத் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த நான்கு வீரர்கள் சுயநினைவு பெற்று, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.