உதவித் தலைவர் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளப் போட்டியிடுகிறார் சாங் லீ காங்

பெட்டாலிங் ஜெயா, மே.15-

அடுத்த வாரம் நடைபெற உள்ள பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவியைத் தக்க வைக்கத் தகுதி உள்ளவர் என்பதை தனது விசுவாசம், அனுபவம், ஆபத்துகளை எதிர்கொள்ளும் தயார்நிலை நிரூபிப்பதாக தஞ்சோங் மாலிம் பிகேஆர் தலைவர் சாங் லீ காங் கூறினார். பல ஆண்டுகளாகத் தாம் பல சோதனைகளை எதிர்கொண்டதாகவும், பலமுறை கைது செய்யப்பட்டதாகவும், போராட்டங்களில் பங்கேற்றதற்காக இரண்டு முறை குற்றம் சாட்டப்பட்டதாகவும், கட்சி மாற பணம் கொடுக்க முயன்றதாகவும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சருமான அவர் கூறினார்.

2022 இல் தான் வென்ற பதவியை 11 பேர் போட்டியிடும் போட்டியில் சாங் லீ காங் தக்க வைக்கவுள்ளார். சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி, நெகிரி செம்பிலான் முதல்வர் அமினுடின் ஹாருன், இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட், தொழில்முனைவர், கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் இரமணன், சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யுனேஸ்வரன், பிகேஆர் கட்சியின் துணைச் செயலாளர் டாக்டர் என். சத்திய பிரகாஷ் ஆகியோரின் வேட்புமனு உட்பட மொத்தம் 11 முனை போட்டி நிலவ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS