மாஸ்கோ, மே.15-
கடந்த 2014 ஆம் ஆண்டு யுக்ரேனில் மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான சந்திப்பின் போது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பேசினார். இந்தச் சம்பவம் தொடர்பான பன்னாட்டு சிவில் விமான போக்குவரத்து அமைப்பான ICAOவின் கண்டுபிடிப்புகள் குறித்து புடினுடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது அன்வார் இந்த விவகாரத்தை எழுப்பினார். எம்எச்17 விமானத்தை ரஷ்யா சுட்டு வீழ்த்தியது என்று ICAO அறிக்கை கூறியுள்ளது.
புடின் இந்த விவகாரத்தைக் கவனத்துடன் கேட்டதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார் என்றும் அன்வார் கூறினார். இந்த விவகாரம் அரசியல்மயமாக்கப்படக்கூடாது என்றும், முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் புடின் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் ரஷ்யா ஒத்துழைக்கத் தயாராக உள்ளது, ஆனால் ரஷ்யா சுதந்திரமற்றதாகக் கருதும் எந்த அமைப்புகளுடனும் ஒத்துழைக்க விரும்பவில்லை என்று புடின் கூறினார்.