பெட்டாலிங் ஜெயா, மே.15
பிகேஆர் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்தில் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள், பிரச்சாரத்தின் போது பிற வேட்பாளர்கள் மீது வெறுப்பைக் காட்டும் நோக்கில் செயல்பட வேண்டாம் என நினைவுறுத்தப்பட்டுள்ளது. கட்சியின் தொடர்புப் பிரிவுத் தலைவர் டத்தோ பாஃமி பாஃட்சீல் அவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். பொதுத் தேர்தலின் போது எதிராளிகளை எதிர்கொள்வதில் ஒன்றாக ஒத்துழைக்கக் கட்சி உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் ஒவ்வொருவரும் அவசியமிக்கவர்கள். எனவே வெறுப்புணர்ச்சியைக் கைவிட்டு ஆரோக்கியமான முறையில் செயல்படுவது சிறந்தது என தொடர்புத்துறை அமைச்சருமான பாஃமி குறிப்பிட்டார்.
இவ்வேளையில் பிகேஆர் தேர்தல் முடிந்த பின் அரசாங்கத் தலைமைத்துவத்தில் எந்த மாற்றமும் இருக்காது என பிரதமர் உத்தரவாதம் அளித்திருப்பதாகவும் பாஃமி தெரிவித்தார். பிகேஆர் மத்தியத் தலைமைத்துவ மன்றத்திற்கானத் தேர்தல் இம்மாதம் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.