ஷாஹிடான் காசீமை எதிர்த்துப் போட்டியிட டத்தோ எஸ். எம். முத்து பரிசீலனை

கோலாலம்பூர், மே.15-

மலேசியத் தடகளச் சங்கத்தின் தலைவர் பதவியை மீண்டும் கைப்பற்றுவது குறித்து அதன் முன்னாள் தலைவர் டத்தோ எஸ்.எம். முத்து பரிசீலனை செய்து வருகிறார்.

மலேசியத் தடகளச் சங்கத்தின் நடப்புத் தலைவரான முன்னாள் பிரதமர் துறை அமைச்சரும், ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ ஷாஹிடான் காசீமை எதிர்த்துப் போட்டியிட்டு, கடந்த முறை தோல்வியுற்ற அந்த உயரிய பதவியை டத்தோ எஸ்.எம். முத்து மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்று சிலாங்கூர் தடகளச் சங்கத்தின் சில இணைச் சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் கோரிக்கையைத் தாம் பரிசீலனை செய்து வருவதாக டத்தோ எஸ்.எம். முத்து தெரிவித்தார்.

அதே வேளையில் தற்போது பெட்டாலிங் மாவட்ட தடகளச் சங்கத்தின் தலைவராக இருக்கும் டத்தோ எஸ்.எம். முத்து, சிலாங்கூர் மாநில தடகளச் சங்கத்தின் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சில குளறுபடிகளைத் தீர்ப்பதற்குத் தாம் அதீத முக்கியத்துவம் அளிக்க வேண்டியிருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS