கெடாவில் சட்டவிரோத மணல் கடத்தல் தடுப்பு

கூலிம், மே.15-

வட மாநில பொது இயக்கப் படையினரும் பிரிகேட் உத்தாரா பசுக்கான் கெராக்கான் ஆம் கெடா மாநில நில இலாகாவும் இணைந்து நடத்திய மூன்று சோதனையில் அம்மாநிலத்திலுள்ள வெவ்வேறு மாவட்டங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தலை முறியடித்திருப்பதாக வடப்பகுதி பொது இயக்கப் படையின் தலைமை அதிகாரி எஸ்ஏசி ஷஹாரோம் பின் ஹாஷிம் கூறினார்.

நேற்று கூலிம் , கோலமூடா மற்றும் புக்கிட் செலம்பாவ் ஆகிய மூன்று மாவட்டங்களில் நடத்திய அச்சோதனையில் அரசாங்கத்தின் அனுமதியின்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட 13 உள்நாட்டவர்களை வடப்பகுதி பொதுப்படையினர் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஷஹாரோம் குறிப்பிட்டார்.

தொடர்ந்து இச்சோதனையின் மேல் விசாரணை பற்றி ஷஹாரோம் பின் ஹாஷின் கூறுகையில் இந்த மணல் கடத்தில் நடவடிக்கை ஏறக்குறைய ஓராண்டுக் காலமாக குறிப்பிட்ட மாவட்டங்களில் நடந்து வந்துள்ளன. அத்துடன் அவர்கள் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் மணல் கடத்தல் கெடா மாநில நில இலாகாவில் எவ்விதமான அனுமதியும் எடுக்கவில்லை என்றார் .
இவர்கள் கடத்தும் ஒவ்வொரு லோரிக்கும் வெ 400.00 ரிங்கிட் வழங்கப்படுகிறது.

ஆகவே, இந்த சட்டவிரோத மணல் கடத்தல் குற்றச்செயல் செக்‌ஷன் 42 தானா நெகாரா 1965 கீழ் விசாரணை நடத்தப்படும். குற்றம் நிருப்பிக்கப்பட்டால் அபராதம் வெ 500,000.00 ஆயிரம் அல்லது 5 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படும் என்று எஸ்ஏசி ஷஹாரோம் பின் ஹாஷிம் கூறினார்.

WATCH OUR LATEST NEWS