ஶ்ரீ காடிங் எம்.பி.யின் வாகனத்தைச் சேதப்படுத்திய முன்னாள் ஆசிரியருக்கு 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

பத்து பாஹாட், மே.15-

ஜோகூர், ஶ்ரீ காடிங் நாடாளுமன்ற உறுப்பினர் அமினொல்ஹூடா ஹசான் சேவை மையத்தின் வாகனத்தைச் சேதப்படுத்திய குற்றத்தை ஒப்புக் கொண்ட பராமரிப்பு மையத்தின் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு பத்து பாஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

அஸ்ரி அபுல் ஹாசான் என்ற 37 வயதுடைய அந்த முன்னாள் ஆசிரியர், தனக்கு எதிராக விதிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்தத் தவறுவாரேயானால் 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

தவிர வாகனத்தைச் சேதப்படுத்தியதற்காக எம்.பி. அமினொல்ஹூடா ஹசானுக்கு 5 ஆயிரம் ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் அருண் உத்தரவிட்டார்.

WATCH OUR LATEST NEWS