தாவாவ், மே.15-
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அடையாளக் கார்டுக்கு ஏற்பாடு செய்வதில் லஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன்னின் இரண்டு அதிகாரிகளுக்கு தாவாவ் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
50 வயது யுலியானா சாஆட் மற்றும் 48 வயது அஸ்மி அமிர் லுன்ஜி என்ற அந்த இரண்டு தேசியப் பதிவு இலாகா அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை பிராசிகியூஷன் தரப்பு வெற்றிகரமாக நிரூபித்துள்ளதாக நீதிபதி ஜேசன் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
அடையாளக் கார்டு தயார்படுத்திக் கொடுப்பதற்கு ஒரு பெண்ணியிடமிருந்து அவ்விரு அதிகாரிகளும் தலா 2 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.