பயிற்சியின் போது அதிகாரிகளின் படகு மோதியது: இருவர் காயம்

லங்காவி, மே.15-

லங்காவியில் லீமா எனப்படும் 2025 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக கடல்சார் மற்றும் ஆகாயக் கண்காட்சியையொட்டி பயிற்சியில் ஈடுபட்டு இருந்த அரச மலேசிய கடற்படைக்குச் சொந்தமான இயந்திரப் படகு ஒன்று, சுற்றுப்பயணிகள் படகை மோதியதில் இருவர் காயமுற்றனர்.

காயமுற்ற இருவரும் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் நிகழ்ந்ததாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஷாரிமான் அஷாரி தெரிவித்தார்.

லங்காவி கடற்பகுதியில் அணைந்திருந்த சுற்றுப்பயணிகள் இயந்திரப் படகை மோதுவதற்கு முன்னதாக, விபத்துக்குள்ளான இயந்திரப் படகில் கடற்படையின் ஐந்து அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS