கோலாலம்பூர், மே.15-
மனித வள அமைச்சின் கீழ் உள்ள மலேசிய இந்தியர்கள் திறன் மேம்பாட்டு முன்னெடுப்பான MISI (மிஸி), மலேசிய இந்தியர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய திறனை வளர்த்துக் கொள்ளவும் மலேசியா முழுவதும் பல்வேறு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
பல்வேறு தொழில் திறன் துறையில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சவால்களுக்கு ஏற்ப இந்திய இளையோர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் சான்றிதழ் அடிப்படையிலான பயிற்சிகளை மிஸி வெற்றிகரமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் இந்திய மாணவர்களுக்காக குறிப்பாக, எஸ்பிஎம் கல்வியை முடித்த மாணவர்களுக்கு iTVET எனும் பிரத்தியேகத் திறன் மேம்பாட்டு பயிற்சியை தற்போது மிஸி, முன்னெடுத்துள்ளதாக மனித வள அமைச்சான KESUMA- வின் (கெசுமா) சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி டிக்காம் லூர்ட்ஸ் விவரித்தார்.
iTVET திறன் பயிற்சியில் ஆர்வம் கொண்டுள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இளையோர்கள், பின் வரும் அகப்பக்கத்தில் தங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வார்களேயானால் மிஸியின் அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வார்கள் என்று டிக்காம் லூர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.