பெட்டாலிங் ஜெயா, மே.15-
2025 ஆம் ஆண்டிற்கான 3.0 தேசிய சேவை பயிற்சித் திட்டமான பிஎல்கேஎன் நாளை மே 16 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
தேசிய சேவை பயிற்சித் திட்டத்தில் பங்கேற்பதற்குத் தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள், தங்களுக்கு அதிகாரப்பூர்வமாக அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்ட இடத்தில் நாளை வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்குள் தங்கள் வருகையை உறுதிச் செய்து கொள்ள வேண்டும் என்று தேசிய சேவை பயிற்சி இலாகா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நியாயமான மற்றும் ஏற்புடைய காரணங்களின்றி, தங்கள் வருகையை உறுதிப்படுத்தத் தவறும் பங்கேற்பாளர்களின் செயல், உத்தரவை மீறுவதற்கு ஒப்பாகும். அவ்வாறு ஆஜராகாதவர்கள் தேசிய சேவை பயிற்சி சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்று அந்த இலாகா எச்சரித்துள்ளது.