முஸ்லிம் அல்லாதவர்களின் சமயச் சடங்குகள் இல்லாத நிகழ்வுகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளலாம்: இஸ்லாமிய சமய மன்றம் அறிவிப்பு

கோலாலம்பூர், மே.15-

திறந்த இல்ல உபரிப்பு, பெருநாள் உபசரிப்பு போன்ற சமயச் சடங்குகள் இல்லாத முஸ்லிம் அல்லாதவர்களின் நிகழ்வுகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளலாம் என்று இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றம் அறிவித்துள்ளது.

முஸ்லிம் அல்லாதவர்களால் நடத்தப்படும் சமயச் சடங்கு இல்லாத பொழுது போக்கு நிகழ்வுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் முஸ்லிம்கள் கலந்து கொள்வதற்கு இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அனுமதி அளிக்கப்படுகிறது என்று இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தின் முஸாகாரா குழுத் தலைவர் நூ காடோட் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் அல்லாதவர்களின் மதக் கொண்டாட்டங்கள் மற்றும் சமயச் சடங்கு விழாக்களில் முஸ்லிம்கள் கலந்து கொள்வது என்பது ஹராம் ஆகும். அவை முற்றிலும் தடை செய்யப்படுகிறது என்று இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று நூ காடோட் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS