ஆசிரியர் தினத்தையொட்டி மாமன்னர் தம்பதியர் வாழ்த்து

கோலாலம்பூர், மே.16-

இன்று மே 16 ஆம் தேதி ஆசிரியர் தினமாகும். ஆசிரியர் தினத்தையொட்டி மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா ஸாரித் சோஃபியா தம்பதியர், அனைத்து ஆசிரியர்களுக்கும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

ஒரு சிறந்த சமுதாயத்தை வடிவமைக்கும் முயற்சியில் தன்னலமின்றி அறிவைப் பகிர்ந்து கொள்ளும் மிக அற்புதமான மனிதர்கள் ஆசிரியர்கள் என்று மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமது முகநூலில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் வர்ணித்துள்ளார்.

ஆசிரியர்கள் இல்லையேல் அறிவு எனும் கரூவூலம் இருக்காது. அறிவும், ஆற்றலுமின்றி முன்னோக்கிச் செல்லும் பாதை இருளையே சுமந்து நிற்கும். மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு ஆசிரியர்களே விளக்கின் தூண்டாமணிகள் ஆவர்.

நகரங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் மாணவர் என்ற வருங்காலத் தூண்களை உருவாக்க தங்களின் தன்னலமற்றச் சேவையின் வழி தியாகத்தின் சுடராக விளங்கும் ஆசிரியர்கள் பெருந்தகைக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் என்று மாமன்னரும், பேரரசியாரும் தங்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS