சிறைச்சாலை வார்டன் சிமெண்ட் லோரியில் அரைப்பட்டு மரணம்

மலாக்கா, மே.16-

மோட்டார் சைக்கிளில் பயணித்த சிறைச்சாலை வார்டன் ஒருவர், சிமெண்ட் லோரியின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே மாண்டார்.

இந்த விபத்து நேற்று மாலை 5.50 மணியளவில் மலாக்கா, சுங்கை ஊடாங், குப்பைகள் அகற்றும் மையத்தின் அருகில் உள்ள லெபோ எஸ்பிஏ சாலையின் சமிக்ஞை விளக்குப் பகுதியில் நிகழ்ந்தது.

42 வயது சார்ஜன் அமால் நுர்லிடார் என்பவரே இந்தச் சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

சிவப்பு நிற சமிக்ஞை விளக்குப் பகுதியில், தனது மோட்டார் சைக்கிளில் அந்த சிறை வார்டன், நின்று கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.

பிரேக் செயலிழந்து இருக்கலாம் என்று நம்பப்படும் அந்த சிமெண்ட் லோரி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து சிறை வார்டனின் மோட்டார் சைக்கிளை மோதியதாக நம்பப்படுகிறது என்று மலாக்கா தெஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS