பாயான் லெப்பாஸ், மே.16-
கட்டுமானத் தளத்தில் பாரம் தூக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாரந்தூக்கி வண்டி ஒன்று, திடீரென்று சாலையை நோக்கி குடை சாய்ந்ததில் அதன் ஓட்டுநர் காயமுற்றார்.
அதிர்ஷ்டவசமாகச் சாலையில் எந்தவொரு வாகனமும் வராததால் உயிர்ப் பலி நிகழ்வது தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் இன்று காலை 9 மணியளவில் பினாங்கு, பாயான் லெப்பாஸ், கம்போங் செரோனோக் அருகில் ஜாலான் பெர்மாதாங் டாமார் என்ற இடத்தில் நிகழ்ந்தது.
அந்த பாரந்தூக்கி வண்டி, பிரதான சாலையில் விழுந்து, வாகனப் போக்குவரத்துக்குத் தடங்களை ஏற்படுத்தியதால் அதனை அகற்றுவதற்கு ஏதுவாக பத்து மாவுங்-பாயான் லெப்பாஸ் சாலை அனைத்து வாகனங்களுக்கும் தற்காலிகமாக மூடப்பட்டது.