புத்ராஜெயா, மே.16-
இஸ்லாத்திற்கு மதம் மாறிய 47 வயது நபர், அந்த மதத்திலிருந்து விலகி, தனது பூர்வீக மதமான கிறிஸ்துவத்திற்கு திரும்புவதற்கு செய்து கொண்ட மேல்முறையீட்டு விண்ணப்பத்தை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
அந்த நபர் செய்து கொண்ட மேல்முறையீட்டு விண்ணப்பத்தில் அடிப்படை தகுதிபாடுயில்லை என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி டத்தோ எம். நந்த பாலன் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
இஸ்லாத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை கடந்த 2010 ஆம் ஆண்டில் கரம் பிடித்ததாகவும், 5 ஆண்டுகள் பிறகு மண முறிவு ஏற்பட்டு விட்டதாகவும் அந்த நபர் தனது விண்ணப்பத்தில் தெரிவித்தார்.
திருமண மண முறிவுக்கு பிறகு தனது பூர்வீக மதமான கிறிஸ்துவ சமயத்திற்கு திரும்புவதற்கு அனுமதி கேட்டுத் தாம் செய்து கொண்ட விண்ணப்பத்தை ஷரியா நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்து விட்டதாக அந்த நபர், தனது மேல்முறையீட்டில் தெரிவித்து இருந்தார்.