மக்களின் சேவையில் தீவிர கவனம் செலுத்துமாறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலியுறுத்து

இஸ்கண்டார் புத்ரி, மே.16-

இது பொதுத் தேர்தல் காலம் அல்ல. மக்கள் சேவையில் தீவிர கவனம் செலுத்துமாறு ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மாநில இடைக்கால சுல்தான், துங்கு மாஹ்கோத்தா இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அறைகூவல் விடுத்துள்ளார்.

இன்று ஜோகூர் பாரு, பஙுனான் சுல்தான் இஸ்மாயில் கட்டடத்தில் ஜோகூர் மாநிலத்தின் 15 ஆவது சட்டமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடரை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் ஜோகூர் ரீஜண்ட் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

ஜோகூர் மாநிலத்தில் உள்ள 56 சட்டமன்ற உறுப்பினர்களும் தத்தம் தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்னைகளைக் கண்டறிவதிலும், அவற்றுக்கு தீர்வு காண்பதிலும் உரிய முன்னுரிமையையும், அழுத்தத்தையும் கொடுக்க வேண்டும் என்று துங்கு இஸ்மாயில் வலியுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS