சிக்காகோ, மே.16-
உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில தேசியத் தாரகை எஸ். சிவசங்கரியின் சவால் முடிவுக்கு வந்துள்ளது.
பிரசித்தி பெற்ற அப்போட்டியில் ஏழாவது நிலையில் இருந்த 26 வயதான சிவசங்கரி சிக்காகோவில் நடந்த காலிறுதிப் போட்டியில் நான்காவது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனையான ஒலிவியா வீவரிடம் 3-11, 11-8, 4-11, 5-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
அரையிறுதில் வீவர் இரண்டாம் நிலை வீராங்கனை எகிப்தின் நூர் எல்-ஷெர்பினியை எதிர்கொள்வார். மற்றோர் அரையிறுதி முற்றிலும் எகிப்திய போட்டியாகும், முதல் நிலை வீராங்கனையான நூர் கோஹர் மூன்றாம் நிலை வீராங்கனையான ஹனியா எல்-ஹம்மாமியைச் சந்திக்கிறார்.
இந்நிலையில் தோல்வியடைந்த் போதிலும், சிகாகோவில் சிவசங்கரியின் பயணம் மறக்க முடியாததாக இருந்தது. மேலும் அப்போட்டியில் காலிறுதிக்கு வருவதற்கான மலேசியாவின் எட்டு ஆண்டு காத்திருப்பையும் அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார்.