அசுத்தத்தின் உறைவிடமாக இருந்த நாசி கண்டார் உணவகம் மூடப்பட்டது

பட்டர்வொர்த், மே.16-

பினாங்கு, செபராங் பிறை உத்தாராவில் அசுத்தத்தின் உறைவிடமாகக் காணப்பட்ட நாசி கண்டார் உணவகம் ஒன்றை உடனடியாக மூடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை, சுகாதார இலாகாவின் ஒத்துழைப்புடன் செபராங் பிறை மாநகர் மன்றத்தின் சுகாதாரப் பிரிவு, அப்பகுதிகளில் உள்ள உணவகங்களில் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையை அமல்படுத்திய போது அந்த உணவகத்தின் சமையல் அறை மிகவும் அசுத்தமாகக் காணப்பட்டது.

உணவகம் சுத்தம் செய்யப்படும் வரையில் அந்த உணவகத்திற்குத் தற்காலிமாக சீல் வைக்கப்பட்டுள்ளதாக செபராங் பிறை உத்தாரா மாநகர் மன்றம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS