லுமுட், மே.16-
16.6 கிலோ கஞ்சாவைக் கடத்தியதாகப் பொருள் பட்டுவாடா பணியாளர் ஒருவர், பேரா, ஶ்ரீ மஞ்சோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
29 வயது முகமட் ஸுல்பிஃக்ரி ரொஸ்லான், என்ற அந்த நபர், கடந்த மே 5 ஆம் தேதி காலை 5.20 மணியளவில் சித்தியவான், ஜாலான் முகமட் சாலையில், ஹோட்டல் பிரெஸா தங்கும் விடுதி முன்புறமுள்ள வாகன நிறுத்தும் இடத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் மரணத் தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் 12 பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டம் 39B பிரிவின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.