புத்ராஜெயா, மே.16-
அந்நிய நாட்டு வாகனமோட்டும் லைசென்ஸை, மலேசிய வாகனமோட்டும் லைசென்ஸுக்கு மாற்றிக் கொள்ளும் அனைத்து வகையான விண்ணப்பங்களும் வரும் மே 19 ஆம் தேதியுடன் நிறுத்திக் கொள்ளப்படுவதாக சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜேவின் தலைமை இயக்குநர் ஏடி பாஃட்லி ரம்லி தெரிவித்துள்ளார்.
மலேசிய வாகனமோட்டும் லைசென்ஸ், தேவைப்படக்கூடிய அந்நிய நாட்டவர்கள், அந்த லைசென்ஸைப் பெறுவதற்கு மலேசியர்கள் பின்பற்றி வரும் நடப்பு விதிமுறைகள் போன்று கடந்து வந்து அந்த மலேசிய ஆவணத்தைப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்நிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட சாலை பாதுகாப்புத் தரநிலைகளை வலுப்படுத்தும் பொருட்டு ஜேபிஜே இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.