சிரம்பான், மே.17-
தனது வர்த்தக வளாகத்தில் லைசென்ஸின்றி, 1,241 கிலோ எடை கொண்ட சமையல் எண்ணெய்யை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக சிரம்பானில் உள்ள ஒரு நாசி கண்டார் உணவகத்தின் உரிமையாளருக்கு சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
கடந்த வியாழக்கிழமை நீதிபதி முகமட் கமீல் நிஸாம் முன்னிலையில் நிறுத்தப்பட்ட நாசி கண்டார் உணவகத்தின் உரிமையாளரான 38 வயது தாஸ் ஜோனி சந்திரா என்று அந்த நபர், தனக்கு எதிரானக் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒரு லட்சம் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றம் நினைவுறுத்தியது.
சம்பந்தப்பட்ட நபர் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி பிற்பகல் 3.15 மணியளவில் சிரம்பான், டத்தாரான் சென்ரலில் உள்ள நாசி கண்டார் உணவகத்தின் பணியார்கள் தங்கும் விடுதியில் சமையல் எண்ணெயைப் பதுக்கி வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.