குவாந்தான், மே.17-
ஜாலான் குவாந்தான்- ஜோகூர் பாரு சாலையின் 156 ஆவது கிலோ மீட்டரில் ரொம்பினுக்கு அருகில் இன்று அதிகாலையில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த வேளையில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து தொடர்பாக அதிகாலை 3.30 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக ரொம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாரிஃப் ஷாய் ஷாரோஃப் மொண்டோய் தெரிவித்தார்.
22 வயது சைக்கிளோட்டி ஒருவர், திடீரென்று சாலையைக் கடக்க முற்பட்ட போது, பெரோடுவா மைவி காரில் பயணித்த 28 வயது ஆடவர், அந்த சைக்கிளோட்டியை மோதித் தள்ளியதுடன் அருகில் உள்ள மதுகுவில் கார் விழுந்ததாக ஷாரிஃப் ஷாய் குறிப்பிட்டார்.
இதில் சைக்கிளோட்டியும், கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே மாண்டனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் கழன்று, தூக்கி எறியப்பட்ட காரின் உபரிப்பாகம் , அவ்வழியே கடந்த பெண் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவரைத் தாக்கி, படுகாயத்திற்கு ஆளானதாக அவர் தெரிவித்தார்.