கோலாலம்பூர், மே.17-
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மலேசியாவின் பொருளாதாரம் 4.4 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. நிலையான குடும்பச் செலவின வளர்ச்சியும், தொடர்ச்சியான முதலீடுகளின் விரிவாக்கமும் இதற்கு முக்கியக் காரணமாகும் என்று மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியாவின் கவர்னர் டான் ஶ்ரீ அப்துல் ரஷீட் காஃப்பாஃர் தெரிவித்துள்ளார்.
மின்சார மற்றும் மின்னியல் சாதனங்களின் ஏற்றுமதிகளால் இதன் வளர்ச்சி தொடர்கிறது. தவிர சுற்றுலா நடவடிக்கைகளும் பொருளாதார வளர்ச்சிக்குப் பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளதாக அப்துல் ரஷீட் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் புள்ளி விவர இலாகாவால் ஆருடம் கூறப்பட்ட 4.4 விழுக்காட்டு முன்கணிப்புக்கு ஏற்ப இந்த பொருளாதார வளர்ச்சி விகிதம் அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.