விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், மே.17-

ஆசியான் உச்ச நிலை மாநாடு வரும் மே 26, 27 ஆகிய இரு தேதிகளில் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவிருக்கிறது.

உபசரணை நாடு என்ற முறையில் மலேசியாவின் அழைப்பை ஏற்று ஆசியான் நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவிருக்கின்றனர்.

ஆசியான் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்யும் வகையில் ஆசியான் மாநாடு நடைபெறும் கோலாலம்பூரில் வான் போக்குவரத்துப் பாதையில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய வான் போக்குவரத்து இலாகாவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் நோராஸ்மான் மாஹ்மூட் அறிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள வான் போக்குவரத்துப் பாதை இரண்டு தினங்களுக்கு மூடப்படும்.

இதே போன்று மாநாடு நடைபெறும் பகுதியில் டுரோன்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS