மலாக்கா, மே.17-
மலாக்காவில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் ஒன்றைப் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
Ekstasi போதைப் பொருள் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக மலாக்கா தெஙா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கிரிஸ்டப்பர் பாதிட் தெரிவித்தார்.
22 க்கும் 36 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த மூவரில் ஒருவர் உள்ளுர்வாசி என்றும் மற்ற இருவர் வியட்நாம் பிரஜைகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலாக்கா, தாமான் மலாக்கா ராயாவில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட சோதனையின் மூலம் இக்கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.