5 எப்ஃஆர்யூ போலீஸ்காரர்கள் இன்னமும் ஐ.சி.யூ.வில் உள்ளனர்

தெலுக் இந்தான், மே.17-

கடந்த செவ்வாய்க்கிழமை தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோர விபத்தில் கடுமையானக் காயங்களுக்கு ஆளான கலகத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஒன்பது எப்ஃஆர்யூ போலீஸ்காரர்களில் ஐவர், இன்னமும் தீவிர காண்காணிப்பில் உள்ளனர்.

ஒன்பது பேரில் மூவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் அறுவரில் ஒருவர், ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மற்ற ஐவர், தெலுக் இந்தான் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்புப் பிரிவான ஐசியூவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று பேரா மாநில சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் பெஃசுல் இட்ஸ்வான் தெரிவித்தார்.

முன்னதாக, மேன்மை தங்கிய பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் ஷா, தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு நேரடி வருகை புரிந்து, பாதிக்கப்பட்ட போலீஸ்காரர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து நிலவரத்தைக் கேட்டறிந்தார்.

WATCH OUR LATEST NEWS