லோரி ஓட்டுநருக்கு 6 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் வழங்க யாரும் முன் வரவில்லை

தெலுக் இந்தான், மே.17-

தெலுக் இந்தான் சாலை விபத்தில் ஒன்பது எப்ஃஆர்யூ போலீஸ்காரர்கள் உயிரிழந்த சம்பவத்தில் மிக ஆபத்தான முறையில் லோரியைச் செலுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 45 வயது நபரை 6 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதித்த போதிலும் அந்த லோரி ஓட்டுநரை ஜாமீனில் எடுக்க யாரும் முன் வரவில்லை.

ருடி ஸுல்கர்நாயின் முகமட் ராடி என்ற அந்த லோரி ஓட்டநர், தற்போது பத்து காஜாவில் உள்ள போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான வழக்கு விசாரணை வரும் ஜுன் 17 ஆம் தேதி நடைபெறுவதற்கு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பேரா மாநில போலீஸ் துணைத் தலைவர் ஸுல்கப்ளி சரியாட் தெரிவித்தார்.

அந்த நபரை ஜாமீனில் எடுக்க யாரும் முன் வராததைத் தொடர்ந்து அந்த நபரைத் தடுப்புக் காவலில் வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இன்று தெலுக் இந்தான் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஸுல்கப்ளி சரியாட் இதனைக் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS