கோலாலம்பூர், மே.17-
வரும் மே 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மூன்று தினங்களுக்கு கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 46 ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டை முன்னிட்டு, 3 தினங்களுக்கு மாணவர்கள், வீட்டில் இருந்தவாறு பிடிபிஆர் இயங்கலை கல்வியை மேற்கொள்வதற்கு கோலாலம்பூரிலும், சிலாங்கூரிலும் 71 பள்ளிகளைக் கல்வி அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.
ஆசியான் தலைவர்கள் மாநாட்டு மையத்திற்கு செல்வதற்கு ஏதுவாக அவர்களின் போக்குவரத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதவாறு, சம்பந்தப்பட்ட சாலைகளையொட்டிய பள்ளிகளுக்கு பிடிபிஆர் கல்வியை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சிலாங்கூரில் பெட்டாலிங் உத்தாமா, பெட்டாலிங், செப்பாங் மற்றும் கோலாலம்பூரில் கெராமாட், செந்துல், பங்சார், புடு என 6 மாவட்டங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
எந்ததெந்த பள்ளிகள் என்பது குறித்து கல்வி அமைச்சு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு கடிதம் வாயிலாக அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.