கோவிட் 19 பெருந்தொற்று: அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணிக்கிறது

கோலாலம்பூர், மே.17-

தாய்லாந்திலும், சிங்கப்பூரிலும் கோவிட் 19 பெருந்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அந்த பெருந்தொற்றின் நிலையைச் சுகாதார அமைச்சு மிக அணுக்கமாகக் கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 பெருந்தொற்று தொடர்பாக மலேசியா வாரத்திற்கு 600 சம்பவங்களைப் பதிவு செய்த போதிலும் இந்த பெருந்தொற்று குறித்து சுகாதார அமைச்சு மிகுந்த விழிப்பு நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் கோவிட் 19 க்கு நிர்ணயிக்கப்பட்ட தேசிய எச்சரிக்கை வரம்பை விட அந்த பெருந்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை மலேசியாவில் குறைவாக உள்ளது என்று டாக்டர் சுல்கிப்ளி அஹ்மாட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS