கைதிகளை வீட்டுக் காவலில் தடுத்து வைக்கும் சட்டத் திருத்த மசோதா, அடுத்த நாடாமன்றக் கூட்டத்தில் தாக்கல்

ஜார்ஜ்டவுன், மே.17-

கடும் குற்றம் புரியாத கைதிகளை வீட்டுக் காவலில் தடுத்து வைப்பது தொடர்பான 1995 ஆம் ஆண்டு சிறைச்சாலை சட்டத் திருத்த மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைபுஃடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தற்போது இந்த உத்தேசச் சட்டத் திருத்த மசோதா நகல், சட்டத்துறை அலுவலகத்தில் மீளாய்வில் இருந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கைதிகளை வீட்டுக் காவலில் தடுத்து வைப்பது தொடர்பில் அது ஆக்ககரமான விளைவுகளை ஏற்படுத்தும் அதே வேளையில் அனைத்து தரப்பினரின் பாதுகாப்பையும் உறுதிச் செய்வதற்கு அமல்படுத்தப்படவிருக்கும் விதிமுறைகள் குறித்து மிக கவனமாக ஆராய்ப்பட வேண்டியுள்ளது என்று சைபுஃடின் விளக்கினார்.

இந்த உத்தேசச் சட்டத் திருத்த மசோதா குறித்து தவறான புரிதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதன் உள்ளடக்கத்தைக் கவனமாக ஆராய வேண்டியுள்ளது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

WATCH OUR LATEST NEWS