தமிழ் சினிமாவின் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘கூலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 14-ந் தேதி வெளியாக உள்ளதால், இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்திலும் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, ரஜினி அடுத்தாக ‘சூர்யாவின் சனிக்கிழமை’ பட இயக்குனர் விவேக் ஆத்ரேயாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை ‘குட் பேட் அக்லி’ பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.