விஜய்யின் ஜனநாயகன் படம் குறித்து நடிகை பிரியாமணி கொடுத்தத் தகவல்

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். தனது கடைசித் திரைப்படமான ஜனநாயகன் படத்தில் காவல் துறை அதிகாரியாக விஜய் நடிக்கிறார் என்று அண்மையில் தகவல் வெளியானது.

இந்நிலையில், தற்போது இப்படம் குறித்து ஒரு அதிரடி தகவலை பிரியாமணி பகிர்ந்துள்ளார். அதில், ” நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. அவருடன் இந்த படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எனது காட்சிகள் படமாக்கப்படவில்லை. விரைவில் எனது காட்சிகளும் படமாக்கப்படவுள்ளது. படத்தில் எனது கதாப்பாத்திரமும் மிகவும் முக்கியமானதுதான் தான்” என்று அவர் தெரிவித்தார்.     

WATCH OUR LATEST NEWS