ஜோகூர் பாரு, மே.17-
ஜோகூர்பாரு, சுங்கை திராம், 16 ஆவது மைலில் இன்று காலை 6.20 மணியளவில் நிகழ்ந்த விபத்தொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த உள்ளூரைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.
யமாஹா என்வீஎக்ஸ் ரக மோட்டார் சைக்கிளில் பயணித்த 25 வயதுடைய பெண்ணை, ஹீனோ ரக லோரி மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட லோரி மோட்டார் சைக்கிளை மோதிய அடுத்த கணமே அந்தப் பெண் தூக்கி எறியப்பட்டார். தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு ஆளான அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே மாண்டதாக போலீசார் தெரிவித்தனர்.