பத்து பஹாட், மே.17-
ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டது மூலம் 16 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள போதைப் பொருளைப் போலீசார் கைப்பற்றினர்.
கடந்த புதன்கிழமை, ஜோகூர், பத்து பஹாட், தாமான் ஶ்ரீ மூலியாவில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் 9.4 கிலோ எடைக் கொண்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.
அந்த நபர் குறித்து உளவுத்துறை வழங்கிய தகவலை அடிப்படையாகக் கொண்டு, இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருலனுவார் முஷாடாட் தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் மொத்த அளவு, 47 ஆயிரம் போதைப் பித்தர்கள் உபயோகிக்ககூடியதாகும் என்று அவர் விளக்கினார்.