நாளை முதல் அனுப்பலாம்

புத்ராஜெயா, மே.18-

2025ஆம் ஆண்டிற்கான படிவம் 6 முதல் தவணைச் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் கல்வி அமைச்சின் இளையத்தளத்திலோ அல்லது அவரவர் பள்ளிகள் மூலம் இயங்கலையில் அனுப்பலாம். வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் மே 19 முதல் 25 வரை மேல்முறையீடு செய்யலாம், மேலும் மேல்முறையீட்டு முடிவுகள் ஜூன் 3 அன்று அதே வழியில் அனுப்பலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 முதல், உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து பொதுப் பல்கலைக்கழகங்களில் படிவம் 6 கல்வித் திட்டத்தை கல்வி அமைச்சு செயல்படுத்தும். மலேசிய தேசியப் பல்கலைக்கழகம் – யுகேஎம் , மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் யுஎஸ்எம் ஆகியவற்றில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம் அறிவியல், சமூக அறிவியல் ஆகிய இரண்டு ஆய்வுத் துறைகளை வழங்கும்.

WATCH OUR LATEST NEWS