கோலாலம்பூர், மே.18-
நேற்று செராஸில் உள்ள தங்கும் விடுதியில் மின்விசிறி, குளிரூட்டி, தொலைக்காட்சி ஆகியன இயங்கிய நிலையிலேயே இருக்க, அங்கு சிங்கப்பூரைச் சேர்ந்த இருவர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டனர். விடுதி ஊழியர் காலணிகள் வெளியே இருந்ததைப் பார்த்து கதவைத் தட்டியும் திறக்காததால், விடுதி மேலாளர் உதவியுடன் திறந்த போது அவர்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது எனக் கூறினார் செராஸ் காவல் துறைத் தலைவர் அஸிஸ்டன் கமிஷனர் அய்டில் போல்ஹசான்.
சாளரம், கதவுகள் ஆகியவற்றின் இடைவெளிகள் குப்பைப் பையைக் கொண்டு செல்லுடேப்பால் அடைக்கப்பட்டிருந்தன. அறையில் கெட்ட வாடை வீசியது, மேலும் கெதாமின் போதைப் பொருள், எரிந்த விறகுகளுடன் கூடிய பார்பிகியூ இர்திக ஆகியன கண்டெடுக்கப்பட்டன. இருவரின் உடலிலும் காயங்கள் எதுவும் இல்லை, மேலும் குற்றவியல் கூறுகள் எதுவும் சம்பந்தப்படவில்லை என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.