செலவு மட்டும் ஒரே காரணம் அல்ல

புத்ராஜெயா, மே.18-

மலேசியாவின் பலதரப்பட்ட உயர்கல்வி வாய்ப்புகளுக்கு மத்தியில், பொதுப் பல்கலைக்கழகங்கள் தங்களின் தகவமைவு, அணுகல், குறைந்தக் கட்டணம், தொழில்துறைக்குத் தேவையான கல்வி ஆகியவற்றால் தனித்து நிற்கின்றன என்று மலாயா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ ஶ்ரீ டாக்டர் நோர் அஸுவான் அபு ஒஸ்மான் தெரிவித்தார்.

மலேசியாவில் சுமார் 1.1 முதல் 1.2 மில்லியன் உள்ளூர் மாணவர்கள் உள்ளனர். அவர்களில் 6 இலட்சம் முதல் ஆறரை இலட்சம் பேர் 20 பொதுப் பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர். பொதுப் பல்கலைக்கழகங்கள் குறைந்த கட்டணம், பொருத்தமான கல்வி, நவீன உள்கட்டமைப்பு ஆகியவற்றின் சமநிலையானக் கலவையை வழங்குவதால் இந்தப் போக்கு நிலவுகிறது. மலாயா பல்கலைக்கழகம் உட்பட பொதுப் பல்கலைக்கழகங்கள், புதிய தலைமுறை மாணவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய உருமாறி வருகின்றன. வசதிகளுக்கு அப்பால், மலாயா பல்கலைக்கழகத்தின் மூன்று முனை தத்துவமான சமூக ஈடுபாடு, தொழில்துறை ஒருங்கிணைப்பு, பன்னாட்டு வெளிப்பாடு ஆகியவை, பொதுப் பல்கலைக்கழகங்களை வெறும் குறைந்த கட்டணத்தை விட சக்தி வாய்ந்த தேர்வாக ஆக்குகிறது என நோர் அஸுவான் கருத்துரைத்தார்.

WATCH OUR LATEST NEWS