கோலாலம்பூர், மே.18-
தலைநகர் கோலாலம்பூரில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் போதைப் பொருள் உட்கொண்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 800 ஆகக் கண்டறியப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலப் பகுதியுடன் ஒப்பிடும்போது 13.8 விழுக்காடு குறைவு என தேசிய போதைப் பொருள் தடுப்பு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார். கோலாலம்பூரில் 1 இலட்சம் பேருக்கு 253 போதைப் பொருள் பயனர்கள் என்ற அளவில் போதைப் பொருட்களையும் தடை செய்யப்பட்ட பொருட்களையும் பயன்படுத்துவோர் விகிதம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரை, 65 விழுக்காடு அல்லது 3 ஆயிரத்து 768 பேர் ஏடிஎஸ் எனப்படும் Amphetamine Type Stimulant வகை போதைப் பொருளை முக்கியமாகப் பயன்படுத்தியுள்ளனர். போதைப் பொருள் தடுப்பு நாளை முன்னிட்டு கோலாலம்பூரில் நடைபெற்ற கேஎல் கார் பிஃடீ மார்னிங் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.