பெட்டாலிங் ஜெயா, மே.18-
டிக் டாக் தளம் தற்போது இளம் பெண்கள் தங்கள் உடலைக் காட்சிப்படுத்தி பணம் சம்பாதிக்கும் இடமாக மாறி வருகிறது. இவர்கள் கவர்ச்சியான அல்லது striptease போன்ற உள்ளடக்கங்களைப் பதிவேற்றுகிறார்கள். நேரடி ஒளிபரப்புகள் மூலம் சந்தாக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறார்கள். சிலர் மாதம் 40 ஆயிரம் ரிங்கிட் வரை சம்பாதிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் பணக்காரர்களாகக் காட்டிக் கொள்ளும் அழுத்தமும் ஆடம்பர வாழ்க்கை முறையின் மீதான ஆசை போன்ற காரணங்களாலும் இந்த போக்கு ஏற்படுகிறது என்று மலாயா பல்கலைக்கழகக் கல்வி புலத்தைச் சேர்ந்த Prof. Madya டாக்டர் அஸ்மாவாத்தி முகமட் நோர் கூறுகிறார்.
இது போன்ற விவகாரங்கள் கட்டுப்பாடின்றி விடப்பட்டால், சமூகம் சீர்குலையக்கூடும் என்றும், இளம் தலைமுறையினர் ஒழுக்கம், நெறிமுறைகள் தளர்ந்து, இச்செயல்களைச் சாதாரணமாகக் கருதக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கிறார். தகவல் தொடர்பு – பல்லூடகச் சட்டம் 1998 இன் கீழ் இது போன்ற உள்ளடக்கங்களை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று அஸ்மாவாத்தியின் கருத்துக்கு யூஐடிஎம்மைச் சேர்ந்த Prof. டாக்டர் முகமட் கைருல்நிஸாம் ஸைனி வலு சேர்த்துள்ளார்.