கோலாலம்பூர், மே.18-
கோலாலம்பூர் மாநகராட்சி மன்ற அதிகாரிகளைச் சமூக ஊடகங்கள் மூலம் மிரட்டியதாகக் கூறப்படும் நபர் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட உள்ளார். பலூன் வியாபாரி சம்பந்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்த மிரட்டல் விடுக்கப்பட்டது. அவர் மீது குற்றவியல் சட்டத்தின் 506, 505(b) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர். பிரிவு 506 குற்றவியல் மிரட்டல் தொடர்பானது. அதே நேரத்தில் பிரிவு 505 பொது தீங்கு விளைவிக்கும் அறிக்கைகள் தொடர்பானது. இந்த வழக்கு முகநூல் கணக்கு உரிமையாளர் ஒருவர் அதிகாரிகளை மிரட்டியது தொடர்பானது என்று பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.