பாங்கி, மே.18-
மலேசிய தேசிய பல்கலைக்கழகம் யூகேஎம்மில் உள்ள டேவான் சென்சலர் துன் அப்துல் ரஸாக் DECTARஇல் இந்த செவ்வாய், புதன்கிழமைகளில் UKM 2025 வேலை வாய்ப்பு தினத்தை நடத்துகிறது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மாணவர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் பல்வேறு வேலை வாய்ப்புகளையும் தொழிற்பயிற்சி வாய்ப்புகளையும் வழங்குகின்றன.
தொழில்முறை கருத்தரங்குகள், இலவச சிவி சரிபார்ப்பு, நிறுவனங்களின் கண்காட்சி, UKM மாணவர்களுக்கான i-STAR மதிப்பெண்கள் , பார்வையாளர்களுக்கு இலவச ஐஸ்கிரீம் வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும். பார்வையாளர்கள் மின்சாரக் கருவிகள், பற்றுச் சீட்டுகள், கவர்ச்சிகரமான பரிசுகளை வழங்கும் அதிர்ஷ்டக் குலுக்கல் ஆகியவற்றில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. தேசிய அளவில் பட்டதாரிகளின் வேலை வாய்ப்பை வலுப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ள Talentbank , UKM-Karier, Naratif Baharu UKM, தொழில் மேம்பாட்டு மையம்,ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.