1,319 புதிய இராணுவ வீரர்கள் சம்பள உயர்வைப் பெறுவர்

போர்ட்டிக்சன், மே.18-

இராணுவப் பயிற்சி தொடர் 202/2024 ஐ முடித்த 1,319 புதிய இராணுவ வீரர்கள், முழுமையாக புதிய பொதுச் சேவை ஊதியத் திட்டமான எஸ்எஸ்பிஏவின் கீழ் சம்பள உயர்வைப் பெறுவார்கள். இராணுவத் தளபதி டான் ஶ்ரீ முகமட் ஹபிஃஸுடின் ஜந்தான் கூறுகையில், அவர்கள் பயிற்சிக் காலத்தில் பெற்ற 1,610 ரிங்கிட்டை விட, கல்வித் தகுதிக்கு ஏற்ப 1,710 ரிங்கிட் முதல் 1,930 ரிங்கிட் வரை தொடக்கச் சம்பளமாகப் பெறுவார்கள் என்றார். இதற்கு முன்பு அவர்களின் சம்பளம் 1,459 ரிங்கிட் ஆக இருந்தது.

இந்த முறை புதிய சம்பளத் திட்டத்தைப் பெறும் முதல் குழு இதுவாகும். மேலும், இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எந்தவொரு வீரரையும் இராணுவம் விட்டுக் கொடுக்காது. சமீபத்தில் மலாக்காவில் ஒரு மாணவியைப் பாலியல் வன்கொடுமைச் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இராணுவ வீரர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். அந்த வீரர் தற்போது காவல் துறையின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் இராணுவம் மேலதிக நடவடிக்கை எடுக்கும் என்றார்.

WATCH OUR LATEST NEWS