தாய்லாந்து பொது பூப்பந்து போட்டியில் மலேசியர்கள் வெற்றி

பேங்காக், மே.18-

மலேசியாவின் பூப்பந்து விளையாட்டின் முன்னணி இரட்டையர்களான ஆரோன் சியா- சோ வூய் இக் தாய்லாந்து பொதுப் பூப்பந்து போட்டியில் வென்று இந்த பருவத்தில் இரண்டாவது பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளனர். ஆண்கள் இரட்டையர் இறுதிப் போட்டியில் டென்மார்க் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

அதே போல், பெண்கள் இரட்டையர் பிரிவில் வெற்றிக் கூட்டணியான பெர்லி தான்- எம்.தீனா ஜோடி அதே போட்டியில் வென்று இந்தப் பருவத்தில் தங்களது முதல் பட்டத்தைக் கைப்பற்றினர். இறுதிப் போட்டியில் தென் கொரிய ஜோடியை வீழ்த்தி அவர்கள் வெற்றி பெற்றனர். 1984க்குப் பிறகு தாய்லாந்து பொதுப் பூப்பந்து போட்டியில் வென்ற முதல் மலேசிய பெண்கள் இரட்டையர் ஜோடி இதுவாகும்.

WATCH OUR LATEST NEWS