இரண்டு சந்தேகப் பேர்வழிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

நீலாய், மே.19-

இரண்டு சந்தேகப் பேர்வழிகள், நெகிரி செம்பிலான், பண்டார் பாரு நீலாயில் நேற்று முன் தினம் சுட்டுக் கொல்லப்பட்டதை போலீசார் இன்று உறுதிப்படுத்தினர்.

இந்த இரண்டு சந்தேகப் பேர்வழிகளும் கடந்த ஆண்டில் நான்கு மாநிலங்களில் 70 க்கு மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு மேலாக குண்டர் கும்பல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்கள் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறைத் துணை இயக்குநர் டத்தோ பாஃடீல் மார்சுஸ் தெரிவித்தார்.

வீடமைப்புப் பகுதிகள், பொருள் பட்டுவாடா மையங்கள், 24 மணி நேரக் கடைகள் என்று இலக்குக்கு உரிய இடங்களில் கொள்ளை நிகழ்த்துவதில் கைத்தேர்ந்தவர்களான இவ்விருவரும் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பேராக், கோலாலம்பூர் ஆகிய நான்கு மாநிலங்களில் இந்தக் கும்பல், பத்து லட்சம் ரிங்கிட்டிற்கு மேல் களவாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவர்களுடன் தொடர்புடைய நபர்கள் என்று நம்பப்படும் மேலும் சிலருக்கு போலீசார் வலைவிரித்து, தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருப்பதாக டத்தோ பாஃடீல் மார்சுஸ் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS